2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு….மோடி உறுதி

லக்னோ :

2022-ம் ஆண்டுக்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில்,‘‘2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் ஒரு வீடு என்ற இலக்கை அடைவதற்காக நகர்புறங்களில் 54 லட்சம் வீடுகளும், கிராமப்புறங்களில் ஒரு கோடி வீடுகளும் வழங்கப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் எளிமையாகவும் சவுகரியமாகவும் வாழ உறுதியேற்றுள்ளோம்.

எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 7.5% ஆக உள்ளது. வரும் காலங்களில் பொருளாதார வளர்ச்சி இதை விட வேகமாக இருக்கும்.

எளிதான வாழ்க்கை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம்,பொழுதுபோக்கு ஆகிய ஐந்தையும் அடிப்படையாக கொண்டது தான் வாழ்க்கை. நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் தருணத்தில் ஒரு நபர் கூட வீடு இல்லாமல் இருக்க கூடாது’’என்றார்.