மத்திய அரசின் பணமதிப்பிழப்பு முடிவை மறுத்தேன்…ரகுராம் ராஜன்

டில்லி:

மோடி அரசின் பணமதிப்பிழப்பு முடிவு குறித்து என்னிடம் ஆலோசனை மேற்கொண்டபோது மறுப்பு தெரிவித்தேன் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மீணடும் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘ பணமதிப்பிழப்பு குறித்து மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தவில்லை என்று நான் எப்போதும் கூறியது கிடையாது. மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டது. ஆனால் இது நல்ல ஆலோசனை கிடையாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. பணமதிப்பிழப்பு சிறந்த முறையில் திட்டமிடவில்லை.

ஜிஎஸ்டி.யை இன்னும் முறையாக செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இதில் கண்டுபிடிக்க முடியாத பிரச்னைகள் உள்ளது. இதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தற்போதைய நிலையில் இது எந்தவிதமான நம்பிக்கையையும் அளிக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.