அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட அரசு முடிவு: தமிழக கல்வித்துறை தகவல்

சென்னை:

மிழகத்தில் உரிய அங்கீகாரமின்றி இயங்கி வரும் பள்ளிகளை விரைவில் மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளிகள் அரசு அங்கீகாரம் இன்றி இயங்கி வருகின்றன. இங்கு படிக்கும் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அங்கீகாரம் இல்லாத  பள்ளிகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 750 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. அந்த பள்ளிகளுக்கு  விரைவில் சீல் வைத்து மூட தமிழக பள்ளிக்கல்வித்துறை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும்  அனைத்து வகை பள்ளிகளும், தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Tamil Nadu Education Information, unrecognised schools
-=-