சேலம்:

ரசு மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் (வயது 51) மாரடைப்பால் காலமானார்.  அவருக்கு திடீரென மாரடைப்பு  ஏற்பட்டதைத் தொடர்ந்து, சேலத்தில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி,  இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் சேவையாற்றி வந்தவர் லட்சுமி நரசிம்மன், அரசு மருத்துவமனை மருத்துவ சங்கத் தலைவராகவும் இருந்து டாக்டர் பணியிடங்களை உயர்த்துவது, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து  பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி, 7 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார். இதனால், அவர் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட 120 மருத்துவர்களை  மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அதுபோல . தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய அவர் ராமநாதபுரம் அரசு மருத்துமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு  திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  இன்று  காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு சக மருத்துவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.