ராஜஸ்தான் பாஜ அரசின் அவலம்: சாலையோரத்தில் பிரேத பரிசோதனை செய்யும் அரசு மருத்துவர்கள்…

ஜெய்ப்பூர்:

பாரதியஜனதா கட்சி ஆட்சி செய்து வரும்  ராஜஸ்தானில் சாலையோரத்தில் அரசு டாக்டர்கள் பிரேத பரிசோதனை நடத்து கின்றனர். இந்த அவலம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானில் பாரதிய ஜனதா மாநில அரசு ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக வசுந்தராஜே சிந்தியா உள்ளார். அங்கு அரசு மருத்துவர்கள் சாலையோரம் அமர்ந்து பிரேத பரிசோதனை நடத்தி வரும் வீடியோ வைரலாகி உள்ளது.  இது கடுமையான விமர்சனத்தை உருவாக்கி உள்ளது. மாநில அரசின்  நிர்வாக சீர்கேடு காரணமாக இந்த அவலம் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

சாலையோரம் பிரேத பரிசோதனை நடைபெறும் காட்சி

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே அரசு அதிகாரிகளை சொந்த வேலைக்கு பயன்படுத்துவதாக ஏற்கனவே  காங்கிரஸ்  கட்சி குற்றம் சாட்டி வரும் நிலையில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இறந்தவர்களின் உடல்களை சாலையோரம் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

கடாரா மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணுக்கு நடைபெற்ற பிரேத பரிசோதனை உளள சமூகநலக்கூடத்திற்கு வெளியே சாலையோரத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை ஊழியர்கள் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தகுந்த வசதி அருகில் எங்கும் கிடைக்காததால், சாலையில்  அமர்ந்து பிரேத பரிசோதனை செய்யும்படி  கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கூறிய பார்மர் மாவட்ட உதவி கலெக்டர் ராஜேஷ்குமார்… நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.

இதுபோலவே மற்றொரு சம்பவமும் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான வெளியான  வீடியோவில், ஒரு மனிதர் அரசு மருத்துவமனைக்கு வெளியே இருந்து…இரண்டு உடல்களை பிரேத பரிசோதனை செய்வது காட்சி வெளியாகி உள்ளது.

இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரங்கேறி வரும் இதுபோன்ற அவலங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 

கார்ட்டூன் கேலரி