மருத்துவர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை கோரி வழக்கு: அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை:

மிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைளில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், வேலைநிறுத்தத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?  உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் முகமது யூனிஸ் என்பவர் மனு செய்துள்ளார். அதில், மருத்துவர்கள் டிச.8 முதல் 13 வரை சிறிய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் ஸ்டிரைக் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த 4ந்தேதி இது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது,  இந்த விவ காரத்தில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் மருத்துவர்கள் போராட்டத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில்,  மருத்துவர்கள் போராட்டத்தை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ள என்று கேள்வி எழுப்பிய நீதிபதிள், இது குறித்து தமிழக அரசுஎன்ன  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாளை அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

அதே வேளையில்,  வேலை நிறுத்தம் செய்து வரும்மருத்துவர்களின் சங்கமும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

திய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்  கடந்த 4ந்தேதி முதல்அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மருத்துவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனவும் மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதன் காரணமாக நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அறுவை சிகிச்சைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய சேவையான மருத்துவ சேவையை வழங்க மறுக்கும் மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.