எல்டிசி சலுகையுடன் அரசு ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம்

--

டில்லி:

விடுமுறை கால சலுகையாக வெளி நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ளது.

 

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விடுமுறை கால சலுகையாக சுற்றுலா செல்லும் திட்டம் (எல்டிசி) மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் கஜகஸ்தான், துர் க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மத்திய அரசு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. இது தொடர்பான திட்ட அறிக்கை உள்துறை, சுற்றுலா, விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இது குறித்து கருத்து கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மத்திய ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பை பெறவுள்ளனர்.

மேலும், மத்திய அரசு ஊழியர்கள் எல்டிசி மூலம் சார்க் நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. எல்டிசி மூலம் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை, பயண கட்டணமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.