ஜெருசலம் புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ. 37 ஆயிரமாக உயர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஜெருசலத்திற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி 20 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அவர் சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில்  வெளியிட்டார். முன்னதாக தமிழக பாஜக தலைவர் தலைவர் முருகன், முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை தெரிவிக்கும் என்று கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏர்படுத்தியது. அது குறித்து பேசிய அவர், கூட்டணி வேறு கொள்கை வேறு கூட்டணி என்றார். கொள்கைப்படி தான் நாங்கள் செயல்படு்வோம். எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருப்பது தமிழகத்திற்கு பெருமை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.