மதுக்கடைகள் திறக்க ஏதுவாக சாலைகள் பெயர் மாற்றம்: திமுக அவசர வழக்கு!

சென்னை,

மிழகத்தில் மதுக்கடைகள் திறக்க ஏதுவதாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, ஊரக மற்றும் நகர சாலைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றக் கோரி உச்சநீதி மன்றம் கடந்த மாதம் தீர்ப்பு அளித்திருந்தது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில், 3,000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

அதையொட்டி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றி, குடியிருப்பு பகுதிகளில் நிறுவ அரசு முயன்று வந்தது.

இதற்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆங்காங்கே சாலைமறியல், டாஸ்மாக் கடை உடைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக தமிழக அரசு,  தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மாநகர சாலைகளாக மாற்றி உத்தரவிட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, திமுக, பாமக சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். திமுக சார்பில் அக்கட்சியின் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை, நாளை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.