நெல்லை வழக்கு: கருணாசை கைது செய்யும் திட்டமில்லை என அரசு பதில்

சென்னை:

கருணாசை தற்போது கைது செய்யும் உத்தேசம் இல்லை என்று அரசு தரப்பில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேவர் சமுதாய அமைப்பு நிர்வாகியின்  கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், முன்ஜாமின் கேட்டு கருணாஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை நாளை நடைபெறும் என்று நீதிமன்றம் கூறி உள்ளது.

இந்த நிலையில் கருணாஸின் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் முன் முறையிட்டனர். அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் இந்த வழக்கில் கருணாஸை கைது செய்யும் திட்டமில்லை என்று கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில்  நடைபெற்றது. அந்த விழாவுக்கு சென்ற கருணாஸ் மற்றும் அவரது கட்சியினர், தமிழ்நாடு தேவர் பேரவைத் தலைவர் முத்தையாவின் காரை தாக்கி கண்ணாடிகளை உடைத்து கருணாஸ் உள்பட அவரது கட்சி நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது

சென்னையில் நெல்லை போலீஸ் முகாமிட்ட நிலையில் கருணாஸ் வழக்கறிஞர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.