அரசு மருத்துவமனை செவிலியர்களின் சீருடைகள் மாற்றம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை:

மிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் நர்ஸ் (செவிலியர்கள்) சீருடைகள் மாற்றப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சீருடை குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற செவிலியர்கள் போராட்டம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஊதிய உயர்வு, சீருடைகள் மாற்றம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தை மற்றும் உயர்நீதி மன்றத்தில் எச்சரிக்கை காரணமாக போராட்டம்  வாபஸ் பெறப்பட்டது.

பின்னர், அவர்களின் ஊதியம் கடந்த ஜூலை மாதம் 2 மடங்காய உயர்த்தப்பட்டது. தொர்ந்து செவிலியர்களின் சீருடைகள் மாற்றம் குறித்து  அமைத்து பரீசலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, செவிலியர்களின் பணிக்காலத்தை பிரதானமாக வைத்து புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்த  தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பச்சிளம் குழந்தைகள் வார்டில் பணிபுரியும் செவிலியர்கள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு (பிங்க்) நிறம் அடங்கிய தொப்பி அணிவார்கள். ‘தமிழ்நாடு அரசு செவிலியர்கள்’ எனும் இலச்சினை பதித்த இளஞ்சிவப்பு நிறத்திலான 2 பாக்கெட்டுகள் கொண்ட அரைக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிவார்கள். வெள்ளை நிற ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

10 ஆண்டுகளுக்கு கீழ் பணியாற்றும் பெண் செவிலியர்கள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம் அடங்கிய தொப்பி அணிவார்கள். செவிலியர்களின் இலச்சினை பதித்த வெள்ளை நிறத்திலான 2 பாக்கெட்டுகள் கொண்ட அரைக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிவார்கள். வெள்ளை நிற ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பெண் செவிலியர்கள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம் அடங்கிய தொப்பி அணிவார்கள். செவிலியர்களின் இலச்சினை பதித்த வெள்ளை நிற அரைக்கை சுடிதார்-பேண்ட் மற்றும் ஓவர் கோட் அணிவார்கள். வெள்ளை நிற ஷூவும், காலுறையும் அணிவார்கள்.

இரண்டாம் நிலை கண்காணிப்பு பெண் செவிலியர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான புடவை, செவிலியர்களின் இலச்சினை மற்றும் அடிப்பாகத்தில் 2 பாக்கெட்டுகள் அடங்கிய ஓவர் கோட், வெள்ளை நிற ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

முதல்நிலை கண்காணிப்பு பெண் செவிலியர்கள் பிஸ்தா பச்சை நிறத்திலான சேலையும், செவிலியர்கள் இலச்சினை மற்றும் 2 பாக்கெட்டுகள் கொண்ட ஓவர் கோட், வெள்ளை நிற ஷூ, காலுறை அணிவார்கள்.

10 ஆண்டுகளுக்கு கீழ் பணியாற்றும் ஆண் செவிலியர்கள் வெள்ளை நிற அரைக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிவார்கள். செவிலியர்கள் இலச்சினை மற்றும் கன்சீல்ட் ரக பட்டன்கள் உள்ள சட்டை அணிவார்கள். கருப்பு ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆண் செவிலியர்கள் வெள்ளை நிற அரைக்கை சட்டையும், அதன் மீது 2 பாக்கெடுகளுடன் கூடிய வெள்ளை நிற ஓவர் கோட் அணிவார்கள். அதில் செவிலியர்கள் இலச்சினை இருக்கும். கருப்பு ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

இரண்டாம் நிலை கண்காணிப்பு ஆண் செவிலியர்கள் இளஞ்சிவப்பு நிற முழுக்கை சட்டையும், அதன் மீது 2 பாக்கெட்டுகளுடன் கூடிய வெள்ளை நிற ஓவர் கோட் அணிவார்கள். அதில் செவிலியர்கள் இலச்சினை இருக்கும். கருப்பு ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

முதல்நிலை கண்காணிப்பு ஆண் செவிலியர்கள் பிஸ்தா பச்சை நிற முழுக்கை சட்டையும், அதன் மீது 2 பாக்கெட்டுகளுடன் கூடிய வெள்ளை நிற ஓவர் கோட் அணிவார்கள். அதில் செவிலியர்கள் இலச்சினை இருக்கும். கருப்பு ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

முதல்நிலை கண்காணிப்பு செவிலியர்கள் தங்க நிறத்திலான காந்தம் பொருந்திய பேட்ஜ் அணிந்திருப்பார்கள். அதில் செவிலியரின் பெயர் சிவப்பு நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். இரண்டாம் நிலை கண்காணிப்பு செவிலியர்களின் பெயர் நேவி புளூ நிறத்தில் தங்க நிறத்திலான காந்தம் பொருந்திய பேட்ஜில் பொறிக்கப்பட்டிருக்கும்.

இதர செவிலியர்களின் பேட்ஜில் கருப்பு நிறத்தில் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்த புதிய மாற்றம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய மாற்றம் மீது ஊரக சுகாதார பணிகள் துறை இயக்குனர் நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

இவ்வாறு   அரசாணையில் கூறப்பட்டுள்ளது.