உதான் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் உள்பட 8 நாடுகளுக்கு விரைவில் சர்வதேச விமான சேவை

டில்லி:

உதான் திட்டம் மூலம் சிங்கப்பூர், கோலாலம்பூர்  உள்பட 8 நாடுகளுக்கு விரைவில் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உதான் என்ற திட்டத்தை  வடிவமைத்துள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 128 புதிய வழித்தடங்கலில் விமான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டு, பல சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 8 சர்வதேச விமான சேவைகளை இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உதான் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உதான் திட்டத்தின் கீழ் புதிய வழித்தடங்களில் விமான சேவைகளை வழங்குவதற்கான உரிமம் ஏலத்தின் அடிப்படையில்   5 விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

உதான் திட்டத்தின்படி இதுவரை உள்நாட்டில் விமான சேவைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சர்வதேச விமான சேவை அளிப்பதிலும் மும்முரம் காட்டப்பட்டு வருகிறது. இதற்கான   8 சர்வதேச விமான போக்குவரத்துக்கான பாதைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சர்வதேச விமான இணைப்புத் திட்டத்திற்கான வரைவுகுறித்து உதான் பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

அதன்படி, கவுகாத்தியில் இருந்து டாக்கா, காத்மாண்டு, யான்கான், கோலாலம்பூர், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கும், விஜயவாடாவில் இருந்து துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 8 இடங்களுக்கு உதான் திட்டத்தின்கீழ் விமான சேவை இந்த ஆண்டு இறுதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கான வரைவு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி,  விமானத்தின் இருக்கை ஒன்றுக்கு மானியமாக வழங்கப்பட உத்தேசித்துள்ள ரூபாய் விவரம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கவுகாத்தியில் இருந்து தாக்காவுக்கு செல்லவிருக்கும் விமானத்தின் இருக்கை ஒன்றுக்கு 2,370 ரூபாய் மானியம் என்றும், காத்மாண்டுக்கு செல்லும் விமான சேவைக்கு ரூ.2710ம், பாங்காக் செல்லும் விமானத்திற்கு, ரூ.4,770, யான்கானுக்க ரூ.7,350 ஆகவிம், கோலாலம்பூர், சிங்கப்பூருக்கு ர.7880 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை விமானத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தனது டிவிடடர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.