ஜிஎஸ்டி.க்கு எதிரான எச்சரிக்கையை புறக்கணித்து மத்திய அரசு பிடிவாதம்…அதிர்ச்சி தகவல்

டில்லி:

ஜிஎஸ்டிக்கு எதிரான எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்து அதை அமல்படுத்துவிதில் பிடிவாதமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தியது. இதற்கு அதிக அளவில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பொருட்கள் மீதான வரி விதிப்பில் மத்திய அரசு தற்போது மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

ஜிஎஸ்டி.யை அமல்படுத்துவதற்கு முன்பு வரி விதிப்பை எளிதான முறையில் கொண்டு செல்ல தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தவில்லை என்று தனியார் நிறுவனங்களின் அளித்த எச்சரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது என்று இதில் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 1ம் தேதிக்கு முன்பு தொழில்துறை வல்லுனர்கள் ஜிஎஸ்டி முறையை எதிர்க்கொள்ள மாற்றங்களுக்கு கூடுதல் காலம் தேவைப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு தயாராகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 20ம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், ‘‘இது ஒன்றும் சிக்கலான பிரச்சனை கிடையாது’’ என கூறியிருந்தார். ஜிஎஸ்டி வடிவமைப்பில் பணியாற்றிய 10-க்கும் மேற்பட்ட வரிவிதிப்பு மற்றும் வருமான வரித்துறை நிபுணர்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இன்போசிஸ் நிறுவனம் கட்டமைத்த ஜிஎஸ்டி தொழில்நுட்ப நெட்வொர்க்கில் பிழைகள் இருந்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதில் இருந்த குறைபாடுகளில் அரசு அதிகாரிகள் ஏந்த ஒரு பொறுப்பையும் ஏற்கவில்லை.

ஜிஎஸ்டி.யில் தற்போது வரை அரசு மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. எனினும் பொருட்களுக்கான வரி விதிப்பை குறைத்திருந்தாலும் மக்கள் பயனடையவில்லை. எம்.ஆர்.பி விதிமீறல் தொடர்பாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.