சுற்றுசூழல் அனுமதி பெற 25 துறைகளுக்கு புதிய நிபந்தனைகள் விதிப்பு….மத்திய அரசு

டில்லி:

இரும்பு, நிலக்கரி, ஆயில் உள்ளிட்ட 25 துறைகளின் புதிய விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய தரநிலை நிபந்தனைகளை விதித்துள்ளது.

மத்திய அரசு புதிதாக நிபுணர் மதிப்பீட்டு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு நிறுவனங்களின் விரிவாக்க திட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பரிந்துரை செய்யும். இதன் அடிப்படையில் மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கும். 25 துளைகளிலும் கடைபிடிக்க வேண்டிய தரநிலை நிபந்தனைகளை சுற்றுசூழல் துறை தயார் செய்துள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் சீரான நிபந்தனை விதிக்கும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இரும்பு, ஸ்டீல், சிமெண்ட், நிலக்கரி, பெட்ரோலியம் சுத்திகரிப்பு தொழிற்சாலை, காகிதம், ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டங்கள், தொற்சாலை தொழிற்பேட்டை உள்ளிட்ட 25 துறைகளில் இந்த புதிய நடைமுறை கடைபிடிக்கப்படவுள்ளது. இந்த துறைகளின் புதிய விரிவாக்க திட்டங்களை நிபுணர் மதிப்பீட்டு குழு பரிசீலனை செய்யும்போது சுற்றுசூழல் துறையின் விதிமுறைகளை ஆய்வு செய்யும். குழுவின் பரிந்துரைகள் கூட்டத்தின் மினிட் புத்தகத்தில் இடம்பெறும்.

You may have missed