மதுரை:

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலையின் முதல் யூனிட் உரிமம் மார்ச் மாதத்திலேயே காலாவதியாகி விட்டது. இந்த சூழ்நிலையில் 2-வது யூனிட்டுக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு உதவியுடன் அந்த நிறுவனம் மறைமுகமாக செய்து வருகிறது.

போராட்டம் குறைந்தபின் ஆலை தொடங்குவதற்கான மறைமுக ஒப்பந்தத்தை அரசு செய்து வருகிறது. மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை எனது போராட்டம் தொடரும்’’ என்றார்.