ஸ்ரீநகர்: கோழிகள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜம்மு காஷ்மீர் அரசு நீக்கி உள்ளது.

கொரோனா தொற்று ஒரு பக்கம் இருக்க பல மாநிலங்களிலும் பரவலாக பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இதையடுத்து பல்வேறு கோழிப் பண்ணைகளில் உள்ள பறவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக , ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கோழி இறக்குமதிக்கு அந்நாட்டு அரசு திடீரென தடை விதித்திருந்தது. இந் நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: பறவை காய்ச்சல் பாதிக்கப்படாத பகுதியிலிருந்து கொண்டு வரும் கோழி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்கு தடை கிடையாது. ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட கோழி பண்ணையிலிருந்து பறவைக் காய்ச்சல் இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.