கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை… தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்…

சென்னை:

ள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவ கல்லூரியுடன்  மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கலூரி அமைக்க ஏற்கனவே மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி அமைக்கப்பட உள்ளது.

இதன் ஒருபகுதியில்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையுடன் அமைக்கப் பட இருக்கிறது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூரில்  ரூ.381.76 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம்  அடிக்கல் நாட்டினார்.

ஏற்கனவே  8 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், இன்றுநு  9-வது புதிய மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு இன்று அடிக்கல் நாட்டப்ட்டு உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்போது,  தமிழகத்துக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.