பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு…..6% விவசாயிகளுக்கு மட்டுமே பயனளிக்கும்

டில்லி:

14 வகையான கோடை கால பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை 4 முதல் 52 சதவீதம் வரை உயர்த்தி பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆதரவு விலை என்பது உற்பத்தி விலையை விட குறைந்தபட்சம் 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். இதை தான் விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

விவசாய வளர்ச்சி குறைந்தது மற்றும் விவசாயிகளின் போராட்டம் அதிகரித்தது போன்ற காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இரட்டை இலக்க உணவு வீக்கம் மற்றும் பற்றாகுறை அதிகரிப்பு போன்ற காரணத்தால் குறைந்தபட்ச ஆதரவு விலையை கடந்த ஆண்டு ஒற்றை இலக்கத்தில் உயர்த்த வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது.

காரீப் பருவ பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை 1.5 மடங்குள் உயர்த்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அருண்ஜெட்லி அறிவித்தார். அதிகபட்சமாக கேழ்வரகுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆயிரத்து 900 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 897 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. காரீப் பருவத்தில் அதிகம் விலையும் நெல்லுக்கான ஒரு குவின்டால் விலை ரூ.200 அதிகரித்து ரூ.1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பருத்திக்கான விலை 26 மதல் 28 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. எள்ளு விதை மற்றும் சோளம் போன்ற சிறு பயிர்களின் விலை அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு என்பது உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், அத்தகைய பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் மாறும் வகையில் இருக்கும்.

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உயர்வு என்பது இது வரை எந்த ஒரு அரசும் செய்யாத செயலாகும். விலை உயர்த்தப்பட்டுள்ள பயிர்கள் அனைத்து அறுவடை முடிந்து அக்டோபர் மாதத்துக்குள் சந்தைக்கு வரக்கூடியதாகும். அதனால் இந்த விலை உயர்வு பயனை விவசாயிகள் முழுமையாக பெற வேண்டும் என்றால் அரசு கொள்முதல் நடைமுறையை விரைந்தும், முறையாகவும் மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் உள்ள 6 சதவீத விவசாயிகள் மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்று அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குழு ஒன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆதரவு விலை திட்டத்தின் கீழ் பெரும்பாலான விவசாயிகளை அரசு கொண்டு வர வேண்டும் என்பது தான் வேளாண் சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அப்போது தான் ஆதரவு விலை உயர்வு பயனை பெற முடியும். 20 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டாலும் நெல் மற்றும் கோதுமை கொள்முதலுக்கு மட்டுமே அதிகளவு கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.