Random image

ராஜஸ்தானில் திடக்கழிவு நிதி 21 சதவீதம் மட்டுமே பயன்பாடு….சிஏஜி அறிக்கை

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் அரசு 2015&7ம் ஆண்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ரூ.292.81 கோடியை ஒதுக்கீடு செய்தது. ஆனால் இதில் 21 சதவீத நிதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திடக்கிழவு உருவாகும் மதிப்பீடு, எதிர்கால திட்டங்கள், தேவையான மனித ஆற்றல், வாகனம், சுற்றுசூழலுக்கு ஆபத்து, திடக்கழிவால் ஆரோக்கிய குறைபாடு போன்ற எந்த பணிகளும் உள்ளாட்சி அளவிலான பரிசீலனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில்,‘‘ராஜஸ்தானின் கிராம பஞ்சாயத்துக்கள், உள்ளாட்சி அமைப்புகளில் கழிவு உற்பத்தியை குறைத்தல், மறுபயன்பாடு, மறு சுழற்சி போன்ற எந்த ஆக்கப்பூர்வ பணிகளும் மேற்கொள்ளவில்லை. அபராதம் விதிக்கும் நடைமுறைக்கான வெள்ளோட்டம் கூட மேற்கொள்ளப்படவில்லை. வீடுவீடாக சென்று பிளாஸ்டிக், திடக்கழிவு, மின்னணு கழிவுகள் போன்றவற்றை தனித்தனியாக சேகரிக்கும் பணி 55.4 சதவீத நகர்புறங்களில் மேற்கொள்ளப்படவில்லை.

கழிவுகள் அனைத்தும் திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 22 உள்ளாட்சி அமைப்புகளில் 3ல் மட்டுமே நிலத்தில் புதைக்கும் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராமப் புறங்களில் இந்த பயன்பாடும் இல்லை. 43 பஞ்சாயத்துக்களில் 3ல் மட்டுமே கழிவுகள் வீடுகள் தோறும் சேகரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்படாத குப்பைகள் மலைபோல் திறந்தவெளியில் குவித்துவைக்கப்பட்டுள்ளது’’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.