அரசு பல்லக்கு நீண்ட நாள் நீடிக்காது!! கமல்

--

சென்னை:

‘‘அரசு பல்லக்கில் செல்வது வெகுநாள் நடக்காது’’ என நடிகர் கமல் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அந்த பதிவில், ‘‘ உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் செல்வது வெகுநாள் நடக்காது.

விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக பேனர்‘ஜி’க்கள் உணரவேண்டும்’’’ என பதிவிட்டுள்ளார்.