ஏர் இந்தியா இழப்பை ஈடுகட்ட ரூ.10 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு

புதுடெல்லி:

ஏர் இந்தியா விமான சேவையால் ஏற்பட்டுள்ள 29 ஆயிரம் கோடி இழப்பை ஈடு கட்ட, ரூ.10 ஆயிரம் கோடி வரை நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு ரூ.49  ஆயிரம் கோடி கடன் உள்ளது.

இதனால் சில ஆண்டுகளாக, மக்களின் வரிப்பணத்தை வைத்து தான் ஏர் இந்தியா விமான சேவை நடந்து வருகிறது. அரசு இப்போது, ஏர் இந்தியாவுக்கு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியாவில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 27,000.

2017, மார்ச் 31-ம் தேதி கணக்கு படி ரூ. 49 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் இருக்கிறது ஏர் இந்தியா.

மும்பையில் உள்ள கட்டிடம் மற்றும் ஏனைய சொத்துகள் என ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,400 கோடி அளவுக்கு சொத்துகள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நிதி நிலைமையை சீரமைக்க ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்க கடந்த ஆண்டு அரசு முயற்சித்தது. ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை.

இந்நிலையில், ஏர் இந்தியாவின் கடன் சுமையை குறைக்கும் வகையில், அந்நிறுவனத்தின் முதலீடு மற்றும் சொத்துகளை விற்று ரூ.10 ஆயிரம் கோடி வரை நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.