சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு மேலும் 15 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுக்கப்பட்டு வருவதாக மக்களும், அரசும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், டெல்லி தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று பரவியது உறுதியாகி உள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. ஊரடங்கு முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், கொரோனா பாதிப்பின் தீவிரம் மாநில அரசுகளிடையேயும், மக்களிடையேயும் அசசத்தை ஏற்படுத்தி வருகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் 773 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதால், பலியானோர் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே  மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

இதனால், பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வருகிறது. குறிப்பாக சென்னையில் ஷாகின்பாத் போராட்டம் நடத்திய வண்ணாரப்பேட்டை பகுதியில் (மண்டலம் 5)  கொரோனா தொற்று அதிக அளவில் உள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பமும், அண்டை வீட்டார்களும் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு போதிய இடம் இல்லாத காரணத்தால், அரசு பள்ளிகள், சமூதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு, சுகாதாரத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இதற்காக பல பள்ளிகள், கல்லூரிகள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள பல பள்ளிகள், கொரோனா தொடுப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் குறைந்தது 14 முதல் 28 நாட்கள் வரை தனித்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதுபோன்ற சூழலில் பள்ளிகளை திறப்பது என்பது இயலாத காரியம். அதனால் தமிழகத்தில் ஒருவேளை ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டாலும், பல கட்டுப்பாடுகள் தொடரும் வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் பள்ளிக் கல்லுரிகள் திறப்பது மேலும் காலதாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அரசு அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக கோட்டை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் நேற்று, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் கூட்டத்திலும், கூட்டத்திலும்  கல்வி நிலையங்களின் செயல்பாடுகள், பொது இடங்களில் அதிகம் கூடும் மத நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு மேலும் ஒரு மாதம் தடை நீட்டிக்கப்படலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.