சென்னை:

ரடங்கு உத்தரவு காரணமாக விளைச்சலான பொருட்கள் விலைபோகாமல் வீணாகி வருவதை தவிர்க்கும் பொருட்டு, விவசாய பொருட்களை அரசே கொள்முதல் செய்து, விற்பனை செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வாழப்பாடி இராம சுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் அனைத்து விதமான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டு, பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்குமாறு அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனால் விளைச்சலாகி உள்ள விவசாய பொருட்கள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து  இந்திய தேசிய கிராம தொழிளர்கள் சம்மேளனம்  தேசிய பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம சுகந்தன், விவசாயப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று  தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகஅரசுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், தற்போதைய மாதங்களில்தான்,  தமிழகம் உள்பட  நாடு முழுவதும்  மா, தர்பூசணி, வெள்ளைப் பூசணி, வெள்ளரி பிஞ்சு மற்றும் முலாம்பழம் போன்ற விவசாயப் பொருட்கள் விளைந்து விற்பனை செய்யப்படுவது வழக்கமான நடைமுறை. இந்த சீசனை எதிர்பார்த்தே விவசாயிகளும் அதற்கு முயற்சியில் சில மாதங்களாக ஈடுபட்டு வந்தனர்.

தற்போது விளைச்சல் முடிந்து விற்பனைக்கு தயாராக உள்ள வாழைப் பூக்கள், தேங்காய், பழங்கள்  உள்பட விவசாய பொருட்கள் போக்குவரத்து இன்றி தேங்கி, அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது . ஊரடங்கு காரணமாக, விவசாயிகள் தங்களது தானியங்கள், பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு  பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

தமிழக அரசு கருத்தில்கொண்டு, விவசாயிகளின் துயர்துடைக்கும் வகையில், அவர்களிடம் உள்ள விளைந்த தானியங்கள், பழங்கள் போன்றவற்றை, அந்தந்தப்பகுதி அரசு அதிகாரிகள் மூலம் வாங்கி, அரசே விற்பனை செய்து, அதற்குரிய  தொகை வழங்க வேண்டும்.

மேலும், விவசாய தொழிலாளர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.

இவ்வாறு  அதில் கூறி உள்ளார்.