புதுடெல்லி:

வீடு வாங்க பணம் கொடுத்தவர்களை அலைக்கழிக்கும் கட்டுமான நிறுவனங்களின் அலட்சியப் போக்குக்கு, திவால் மற்றும் வங்கி மோசடி சட்டம் முற்றுப்புள்ளி வைக்கும் என, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


சொந்த வீடு வாங்க நினைத்த கட்டுமான நிறுவனத்திடம் பணத்தை கொடுக்கிறார்கள். சிலருக்கு வங்கிக் கடன் மூலம் பணம் பெற ஏற்பாடு செய்கிறார்கள்.

குறித்த நேரத்தில் குடியிருப்பை பெற முடியாமல் அலைக்கழிக்கப்படும்போது, கட்டுமான நிறுவனம் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், புதிய திவால் சட்டத்தின் கீழ் கட்டுமான நிறுவனத்தின் மீது திவால் மற்றும் வங்கி மோசடி வழக்கை தொடர இந்த சட்டம் வழி வகுக்கும்.
புதிய சட்டத்தின்படி, இனி வீடு வாங்க முன் வந்து கட்டுமான நிறுவனத்துக்கு பணம் கொடுத்தவர், கடன் வழங்கியவராக கருதப்படுவார்.

இந்த வழக்கு 6 மாதங்களுக்குள் கட்டாயம் முடிவுக்கு வரவேண்டும் என்பதால், கட்டுமான நிறுவனங்களின் அலட்சியப் போக்கு இனி இருக்காது.

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மத்திய கார்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வீடு வாங்குவோர் அதிக அளவு வாக்களித்ததாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், திவால் சட்டத்தின் படி கட்டுமான நிறுவனங்கள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கை வீடு வாங்குவோருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.