திருப்பூர்:
கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து அடியோடு முடங்கி உள்ள நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை வாடகைக்கு விடும் முடிவுக்கு வந்துள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் பேருந்துகள் வாடகைக்கு கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தமிழக போக்குவரத்துக் கழகம் அடியோடு முடங்கி உள்ளது. இதன் காரணமாக, வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், பேருந்துகளை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, தினமும், 100 கி.மீ., துாரத்துக்கு குறைந்த கட்டணத்தில் தொழிலாளர்களை அழைத்து செல்ல பஸ் இயக்கப்பட உள்ளதாகவும், நிறுவனங்கள் மொத்தமாக ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கவும் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தை ஈடுகட்ட, தினமும், 100 கி.மீ., துாரத்துக்கு பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், வர்த்தக நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான பணியாளர்களை அழைத்து வர போக்குவரத்து கழகத்தை அணுகலாம் என கோவை வட்டார போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.
ஒரு பேருந்தில் 40 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி. ஒரே மாவட்டத்துக்குள், 100கி.மீ., எங்கிருந்து வேண்டுமானாலும் பஸ் இயக்கப்படும். என்றும் நாள் ஒன்றுக்கு  4,730 ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.
தொடர்புக்கு கோவை – 90420 69276, திருப்பூர் – 94878 98530 என்ற எண்ணில் அழைக்கலாம்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.