சென்னை, திருவள்ளூர் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!! அரசு எச்சரிக்கை

சென்னை:

சென்னை,திருவள்ளூர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

வங்க கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்ன, திருவள்ளூர் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆட்டோக்களில் ஒலி பெருக்கி மூலம் மீனவ குடியிருப்புகள், கடற்கரை ஓரங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.