முழு பெரும்பான்மையுள்ள அரசு நீதித்துறையை கட்டுப்படுத்த முயற்சிக்கும்….நீதிபதி செல்லமேஸ்வர்

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் கொச்சினின் மனோரமா செய்தி சேனல் சார்பில் நடந்த கருத்தரங்கில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கலந்து கொண்டார்.

‘சுதந்திரத்தின் விலை’ என்ற தலைப்பில் அவர் பேசுகையில்,‘‘ அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் அரசியலமைப்பில் நடைமுறை ஏற்படுத்த வேண்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது என்பது மனித இயல்பு. இந்த இயல்பு என்பது ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் எதிர்பார்க்கிறது. ஒரு ஜனநாயக நாடு சட்டத்தின் ஆட்சியில் தான் இருக்க வேண்டும். தனி மனிதனின் ஆட்சியில் இருக்க கூடாது. அதனால் தான் அரசியலமைப்பு உருவாகிறது.

மாநிலத்தில் பல அமைப்புகள் சுதந்திரமாக செயல்படும் வகையில் அரசியலமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சுதந்திரம் என்பது உயர் அலுவலகத்தில் இருப்பவர்களை பொறுத்தது. ஒரு நீதிபதி இரு சூழ்நிலைகளில் தனது சுதந்திரத்தை இழக்க நேரிடுகிறது’’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ‘‘எதையாவது மறைக்க வேண்டும் என்று நினைக்கும் போதும், அபிலாசசைகளை விலக்கி அரசுக்கு எதிராக செயல்படும் போதும் ஒரு நீதிபதி சுதந்திரத்தை இழக்க நேரிடுகிறது. தனது திறன் மீது ஒரு நீதிபதிக்கு நம்பிக்கை ஏற்படுவது தான் உண்மையான சுதந்திரம். மனிதர்கள் தேவதைகளாக இருந்துவிட்டால் அரசாங்கம் தேவையில்லை. அதே தேவதைகள் மனிதர்களை நிர்வகிக்க வேண்டும் என்றால் சட்டத்தின் தேவை இருக்காது’’ என்றார்.

தலைமை நீதிபதிக்கு எதிராக கடிதம் எழுதியது குறித்த கேள்விக்கு செல்லமேஸ்வர் பதில் கூறுகையில்,‘‘முழு பெரும்பான்மையுடன் இருக்கும் அரசுகள் நீதித்துறை கட்டுப்படுத்த முயற்சி செய்யும். இது போன்ற சூழ்நிலையில் பதவியில் உள்ள ஒரு நபரின் குணாதிசிய வலிமை தான் முன் நிற்கும். அப்போது சுதந்திரத்தை ஜீரணித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி