மத்திய பிரதேசம்: காங்கிரஸ் ஆட்சி அமைக்க கவர்னர் ஆனந்திபென் அழைப்பு

போபால்:

த்திய பிரதேச மாநிலத்தில், பாஜக கோட்டையை தகர்த்தெறிந்து, காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. இதைத்தொடர்ந்து மாநில கவர்னர் ஆனந்தி பென் படேலை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கக்கோரி கடிதம் கொடுத்தனர்.

கவர்னரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

230  கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை. ஆனால், நடைபெற்று முடிந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்களும், பாஜகவுக்கு 109 இடங்களும்  கிடைத்துள்ளன. இது தவிர சுயேச்சைகள் 4, பகுஜன் சமாஜ் கட்சி 2 மற்றும் சமாஜ்வாதி கட்சி 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவு தருவதாக கடிதம் கொடுள்ளன. மேலும் சுயேச்சைகள் 4 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது.

முன்னதாக  15 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக இருந்து ஆட்சி செய்து வந்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ராஜினாமா செய்தார்.

ம.பி.முதல்வர் சவுகான் ராஜினாமா கடிதம்

அதைத்தொடர்ந்து,  காங்கிரஸ் கட்சி  ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரி உள்ளது. காஙகிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங் உள்பட முக்கிய நிர்வாகிகள் கவர்னர் ஆனந்தி பென் படேலை சந்தித்து ஆட்சி அமைக்க கடிதம் வழங்கினர்.

அதையடுத்து, ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளனார். அதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு  சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  ஆலோசனை நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற கட்சித்தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார். அதைத்தொடர்ந்து பதவி ஏற்பு நாள் குறித்து அறிவிக்கப்படும்.