பணம் கொடுத்த துணைவேந்தர்களை அடையாளம் காட்டினால் நடவடிக்கை: ஜெயக்குமார்

சென்னை:

தமிழகத்தில் பணம் கொடுத்து துணைவேந்தர்கள் பதவியை வாங்கியவர்கள் யார் என்பது குறித்து புகார் அளித்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மிழக பல்கலைக்கழகங்களுக்க  துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டில்  பல கோடி ரூபாய் பணம் விளையாடி இருப்பது தெரிய வந்துள்ளது என்று ஆளுநர் பன்வாரிலால் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் ததமிழக அரசு மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்.

இதற்கு பதில் அளித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமனம் செய்வது ஆளுநர்களின் பணியே தவிர அதற்கும், தமிழக அரசுக்கும், தமிழக கல்வித் துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழக கவர்னர் குற்றம் சாட்டியபடி, பணம் கொடுத்து துணைவேந்தர்கள் பதவியை  வாங்கியவர்கள் யார் என்பது குறித்து புகார் அளித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.