Random image

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய ஆளுநருக்கே அதிகாரம்!: . ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கருத்து

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கே முழு அதிகாரம் இருக்கிறது என்று ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர்  தெரிவித்ததாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து ஆராய அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது.

இந்த நிலையில் எழுவர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கே முழு அதிகாரம்  இருப்பதாக  ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:

“ 161 சட்டப்பிரிவை பொறுத்தவரை ஒரு மனுவைப் பெற்று அதன்மீது ஆணை பிறப்பிக்க ஆளுநருக்கே அதிகாரம் இருக்கிறது. மாநில அரசு மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம். ஒப்புதல் அளிக்காமலும் இருக்கலாம். எழுவர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரமும் ஆளுநரிடமே உள்ளது”  என வள்ளிநாயகம் தெரிவித்தார்