புனே: மகாராஷ்டிராவில் உடனடி பலப்பரீட்சைக்காக  சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் இணைந்து வைத்தக் கோரிக்கையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஆளுநர் மீது பல முக்கியஸ்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் அரசியலமைப்பு நிபுணர்களும் அக்டோபர் 24 அன்று சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து. அரசியல் முன்னேற்றங்களில்  ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் நடத்தை கேள்விக்குரியது என்கின்றனர்.

முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் நியமனம் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கான அவர்களின் முயற்சியில் இருந்து எதுவுமே அரசியலமைப்பு வழி அல்ல.

சட்டமன்றக் காலம் முடிவடைந்தபோதும், காபந்து முதலமைச்சரின் நியமனம் அரசியலமைப்பிற்கு விரோதமானது. இந்த அரசியலமைப்பற்ற நிகழ்வுகளுக்கு ஆளுநர் ஒரு அம்சமாக இருக்கக்கூடாது. “எம்.எல்.ஏக்கள் முதலில் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும், அப்போதுதான் சட்டமன்றம் பிறக்கிறது, பின்னர் அரசாங்கம் உருவாகிறது”, என்று ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, பி பி சாவந்த் கூறினார்.

அரசியலமைப்பை நிலைநிறுத்த ஆளுநர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டிய அவர். “இந்த வழக்கில், ஆளுநர் அரசியலமைப்பையும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளையும் தெளிவாக மீறியுள்ளார்.  அலுவலகத்தின் மாண்பை பராமரிக்க அவர் தவறிவிட்டார்.” என்று அவர் மேலும் கூறினார்.