புதுச்சேரி,

மிழக ஆளுநர் நேற்று முதன் கோவையில் அரசின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி போல, தமிழகத்திலும் ஆளுநர் தலையீடு நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

 

நேற்று கோவை கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்ற ஆளுநர் பன்வாரிலால், அங்கு அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும், இன்றும் ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  ஆனால், ஆளும் தமிழக  அரசோ வரவேற்பு செய்துள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரிமுதல்வர் நாராயண சாமி,  அரசில் ஆளுநர் தலையிடும் நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளது என்று அதிரடியாக கூறினார்.

மேலும், மாநில அரசை கட்டுப்படுத்த ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களை மத்திய பாரதிய ஜனதா அரசு பயன்படுத்துகிறது என்றும்,  ஆளுநர் ஆய்வு செய்வது தவறல்ல, ஆனால் தன்னிச்சையாக முடிவு எடுப்பது தான் தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.