ஆளுநர் – அமைச்சர்கள்: எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றம் அளித்த சந்திப்பு!

சென்னை:

ன்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, தலைமைச் செயலாளர் சந்தித்தார்.  பிறகு மீண்டும் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் கவர்னரை சந்தித்தார் தலைமைச் செயலாளர்.

 

 

 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ. பன்னீர் செல்வத்தை முதல்வராகவும், எடப்பாடி பழனிச்சாமியை துணை முதல்வராகவும் நியமிக்கப்போகிறார்கள் என்ற தகவல் அல்லது யூகம் அல்லது வதந்தி பரவி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

1இதற்கிடையே, “ முதல்வர் துணை முதல்வர் என்பதெல்லாம் இல்லை. ஜெயலலிதாவிடம் இருக்கும் துறைகளை இந்த இரு அமைச்சர்களுக்கு பிரித்துக்கொடுக்கப்போகிறார்கள். ஜெயலலிதா, இலாகா இல்லாத முதல்வராக தொடர்வார். டில்லி முதல்வர் கெஜ்ரிவால் போல!” என்று ஒரு யூகம் கிளம்பியது.

சமூகவலைதங்களில் இதுதான் இன்றைய முக்கிய டாபிக். அதேபோல இருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தால் முதல் கேள்வி, “யாரு புதிய முதல்வர்” என்பதுதான்.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த அதிமுகவினருக்குள்ளும் ஏகப்பட்ட யூகங்கள்.  இன்றைய சந்திப்புகள் பரபரப்பையும் மட்டுமல்ல.. ஆளும் தரப்பிடம் பதட்டத்தையும் ஏற்படுத்தியது உண்மை.

கடைசியில், “இந்த சந்திப்பெல்லாம் ச்சும்மா..” என்று சொல்வதுபோல, ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியானது.

“ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் அமைத்திருக்கும் காவிரி உயர் தொழில்நுட்பக் குழு தமிழகத்தை பார்வையிட வரவிருக்கும் நிலையில், என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறித்து ஆளுநர் கேட்டார். . பொதுப் பணித் துறை அமைச்சர் அது குறித்து விளக்கமளித்தார். மேலும் மாநில அரசின் தற்போதைய நிர்வாகம் குறித்து ஆளுநர் கேட்டதற்து, தலைமைச் செயலர் பி. ராம மோகன ராவ் விரிவாக எடுத்துக்கூறினார்.

மருத்துவமனையில் உள்ள முதலமைச்சரின் உடல்நலம் குறித்தும் ஆளுநர் விசாரித்ததார்” என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது பரபரப்பு அடங்கியிருக்கிறது… !

கார்ட்டூன் கேலரி