சென்னை:

அதிமுகவை பிளவுபடுத்த தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சதி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று கூவத்தூர் சென்று ரிசார்ட்டில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார். அப்போது செங்கோட்டையன், தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் இருந்தனர். எம்.எல்.ஏக்களை தனித் தனியாக சந்தித்து சசிகலா பேசினார்.

மக்களிடம் எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது. தொண்டர்கள் யார் முதல்வராக வரவேண்டும் என நினைக்கின்றனர் உள்பட பல கேள்விகளை எம்.எல்.ஏக்களிடம் சசிகால கேட்டார். எம்.எல்.ஏக்களும் தனிப்பட்ட விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்து போயஸ் கார்டன் திரும்பிய சசிகலா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மன உறுதியுடன் உள்ளனர். எம்.எல்.ஏ.,க்களுடான சந்திப்பு மனநிறைவாக இருந்தது. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் கவர்னர் காலம் கடத்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையாக கருதுகிறேன். இதுவரை பொறுமையாக இருந்தோம். நாளை வேறு விதமாக போராடுவோம்’’ என்றார்.