காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி…கவர்னர் பரிந்துரை

ஸ்ரீநகர்:

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பாஜக, பிடி.பி. கூட்டணி முறிந்துள்ளது. இதனால் முதல்வர் மெஹபூபா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் வோரா பரிந்துரை செய்துள்ளார். அவரது பரிந்துரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் கிடைத்தவுடன் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.