தமிழக நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை

சென்னை:

தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பினார்.

தமிழக கவர்னர் (பொறுப்) வித்யாசகர் ராவ் மதியம் சென்னை வருகை தந்தார். அவரை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து தம்முடைய ராஜினாமாவை கட்டாயப்படுத்தி வாங்கினார் சசிகலா. சட்டப் பேரவையில் தாம் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிவழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

இதைத் தொடர்ந்து கவர்னரை வித்யாசகர் ராவை சசிகலா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இருதரப்பு விவரங்களையும் சேகரித்து மத்திய அரசுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையின் நகல் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விரைவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் கவர்னர் பேசுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உரிய ஆலோசனைக்கு பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.