7 பேர் விடுதலையை கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும்…..ஓ.பன்னீர்செல்வம்

சென்னை:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்ய வேண்டியது கவர்னரின் பொறுப்பு என்று துணை முதல்-வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘இலங்கை போரின் போது இந்திய அரசு உதவியதாக ராஜபக்«ஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதற்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளி என அறிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடக்கிறது. அமைச்சர் கடம்பூர் ராஜூ மீதான குற்றச்சாட்டு குறித்து எம்எல்ஏ சண்முகநாதனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

ஹெச்.ராஜா என்ன மன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது கருத்துக்களுக்கு பதிலளிக்க தயாராக இல்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கவர்னரின் பொறுப்பு. ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முறையான நடவடிக்கை எடுத்துள்ளது. புஷ்கரம் விழா சில இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளதாக வந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்படும்’’என்றார்.