(பைல் படம்)

சென்னை: 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த 22ந்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் காட்டு மிராண் டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில்  2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சில நாட்களாக தூத்துக்குடியில் பகுதியில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், தற்போது ஓரளவு அமைதி திருமபி உள்ளது. இந்த நிலையில், 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டது.

இந்நிலையில் துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள் இன்று காலை தூத்துக்குடி சென்று மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். துணை முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்று பாதிக்கப்பட்டவர்கள் 47 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு நிவாரண தொகை காசோலையையும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்த நிலையில், அவசரம் அவசரமாக சென்னை திரும்பினார். இதற்கான காரணம் தெரியாத நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறையினருடன்  ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாளை கவர்னர் பன்வாரிலால் தூத்துக்குடி செல்ல திட்டமிட்டு இருக்கும் நிலையிலும் தமிழக  சட்டப்பேரவை கூட்டம் மானிய கூட்டம் நாளை நடைபெற இருப்பதாலும், அதுகுறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பங்கேற்றுள்ளார்.