சசிகலா பதவி பிரமாணம் குறித்து என்னிடம் கவர்னர் எதுவும் கேட்கவில்லை…அட்டர்னி ஜெனரல் தகவல்

டெல்லி:

சசிகலா பதவி ஏற்பது குறித்து தமிழக கவர்னர் எவ்வித ஆலோசனையும் கேட்கவில்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.


சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர். இதனால் அவர் முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். அப்போது தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசகர் ராவ் ஊட்டியில் இருந்தார். அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அங்கிருந்து அப்படியே நேராக டெல்லி சென்றார்.
டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து பேசினார். பின்னர், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியையும் வித்யாசகர் ராவ் சந்தித்து, சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைப்பது குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் தற்போது என்னிடம் தமிழக கவர்னர் வித்யாசகர் ராவ் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.