சென்னை

வர்னர் இன்று மாலை மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார்.

அ தி மு க வில் எடப்பாடி அணியும் ஓபிஎஸ் அணியும் இணந்ததையொட்டி, தினகரன் அணி எம் எல் ஏ க்கள் போர்க்கொடி உயர்த்தியது தெரிந்ததே.     தினகரன் தரப்பு எம் எல் ஏக்கள் ஆளுனரிடம்  எடப்பாடி பழனிச்சாமியை மாற்றச்சொல்லி மனு அளித்தனர்.   ஆனால் முடிவு எதுவும் எடுக்காமல் ஆளுனர் வித்யாசாகர் மும்பை சென்று விட்டார்.

தினகரன் தரப்பில் தற்போது 21 எம் எல் ஏக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.   அனைவரும் புதுச்சேரி உல்லாச விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   எதிர்க்கட்சிகளான தி மு க மற்றும் காங்கிரஸ் சட்டசபையை உடனடியாகக் கூட்டி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் கூறி உள்ளன.    அரசியல் நோக்கர்கள் பலரும் அரசு பெரும்பான்மையை இழக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று ஆளுனர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார்.   அவர் சட்டசபையைக் கூட்ட உத்தரவிடுவார் எனவும், நம்பிக்கை வாக்கு கோருமாறு எடப்பாடி அரசுக்கு வலியுறுத்துவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் திங்கட்கிழமை நடக்க உள்ளது .   அதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்துக் கொள்கிறார்.   கவர்னர் மாளிகைக் குறிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை நடக்கப் போகும் அந்த விழாவில் கலந்துக் கொள்ள கவர்னர் வரப்போவதாக சொல்லப்பட்டுள்ளது.