சிதம்பரம் நகருக்கு ஆளுநர் பன்வாரிலால் வருகை:  வணிகர்கள் கடையடைப்பு!

--

சிதம்பரம் :

ன்று சிதம்பரம் வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கவனத்தை ஈர்க்கும்படியாக நகரில் வணகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று வருகை சிதம்பரத்துக்கு வருகை தருகிறார். மாலை 6 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்வதோடு, நாட்டியாஞ்சலி விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.

சிதம்பரம் வரும் ஆளுநரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வணிகர்கள் 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் பிரச்னைகளில் அரசு அக்கறை காட்டுவதில்லை என்றும் இதற்காக ஆளுநரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக  கடையடைப்பு நடத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

க்கள் பிரச்னைகளான பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் பிரச்னை உள்ளிட்டவற்றில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சிதம்பரம் நகரவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.