யானை சவாரி செய்த ஆளுநர்: அதிகாரிகள் ஆச்சரியம்

உதகை மலர் கண்காட்சியை துவக்கிவைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதுமலையில் யானை சவாரி மேற்கொண்டது, அங்கிருந்த அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற உதகை மலர்க்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, உதகையில் மலர் கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக நேற்று நீலகிரி வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்று கண்காட்சியை துவக்கி வைத்து, மலர் கண்காட்சியையும் பார்வையிட்டுச் சென்றார்.

இந்நிலையில் இன்று காலை முதுமலை வன விலங்குகள் சரணாலயத்திற்கு வந்த ஆளுநர், யானை சவாரி செய்து மகிழ்ந்தார். ஆளுநரின் யானை சவாரியை கண்டு அங்கிருந்த அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

ஆளுநரின் வருகையை முன்னிட்டு முதுமலையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி