கர்நாடகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்ற குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில் “ஆட்சி அமைக்க எடியூரப்பாவைத்தான் ஆளுநர் அழைப்பார்!’’ என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 104 இடங்களை பிடித்தது.  மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களையும்,  காங்கிரஸ் 78 இடங்களையும்  கைப்பற்றின.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்+ ம.ஜ.த. கட்சிகளிடையே  கடும் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் மற்றும் ம.த.ஜ. கட்சிகளின் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாக புகார் எழுந்துள்ளது.

மஜத  ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்ததால் இவ்விரு கட்சிகளும் இணைந்தன.  இதனால் இவ்வணிக்கு 78+37+1+2=118 இடங்கள் உள்ளன.   பாஜக சார்பில் எடியூரப்பாவும், மஜத+காங்., சார்பில் குமாரசாமியும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.  இருவரில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, ‘’எடியூரப்பாவைத்தான் முதலில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார்’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.