கவர்னரின் ஆய்வு ஆரோக்கியமானமாதே! அமைச்சர் செல்லூர் ராஜூ

--

மதுரை,

ன்று மதுரைக்கு வந்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, கவர்னரின் அரசு அதிகாரிகளுடனான  ஆய்வு ஆரோக்கியமான நடவடிக்கையே என்று கூறி உள்ளார்.

அரசு விழாவில் பங்கேற்க மதுரை வந்ததுள்ள அமைச்சர் செல்லூர் ராஜு,  மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.38 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள  வணிக வளாகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,  தமிழக கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதில் எந்த தவறும் இல்லை. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஆய்வு செய்யும்போதுதான் தமிழக அரசின் செயல்பாடுகள் அவருக்கு நேரடியாக தெரியவரும்.

இதன் காரணமாக மத்திய அரசுடன் பேசி தமிழகத்திற்கு தேவையான கூடுதல் திட்டங்களையும், நிதிகளையும் பெற்றுத்தருவார். எனவே கவர்னர் ஆய்வு செய்வது ஆரோக்கியமான நடவடிக்கைதான் என்று கூறினார்.

மேலும், போக்குவரத்துக்கழகங்கள் அடகு வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போக்குவரத்து கழகங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால் தி.மு.க.வினர் வேண்டுமென்றே அ.தி.மு.க. அரசு மீது களங்கத்தை சுமத்தி வருகின்றனர் என்றார்.

தி.மு.க. ஆட்சி காலங்களில் பெரும்பாலான துறைகள்  நலிவடைந்த நிலையில் இருந்தது. போக்குவரத்து துறையும் நலிவடைந்து அடமானம் வைக்கப்பட்டது., ஆனால், தற்போது தமிழகத்தின் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.