ஆளுநர் பாதுகாப்பு வாகனம் விபத்தை ஏற்படுத்தவில்லை!: ஆளுநர் மாளிகை அறிக்கை

சென்னை :

மாமல்லபுரம் அருகில் விபத்தை ஏற்படுத்திய ஆளுநர் பாதுகாப்பு வாகனம் அல்ல என்றும், மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த வாகனம்தான் விபத்தை ஏற்படுத்தியது என்றும் ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு சென்னை திரும்பிய போது, அவரது அணிவகுப்பில் வந்த வாகனம் மோதி மூவர் பலியானார்கள். மாமல்லபுரம் அருகே புதிய கல்பாக்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் “ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதிய செய்தி தவறு. , அதுபோல எந்த ஒரு விபத்தும் நடக்கவில்லை.

இந்த விபத்து குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது” என்றும், “உண்மையில் மாவட்ட காவல் துறை நிர்வாகத்தின் கார் மோதியே விபத்து ஏற்பட்டது” என்றும் ஆளுநர் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.