சென்னை:
மிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி.செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை இன்று பதவியேற்றது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்ற 33 அமைச்சர்களும் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டனர்.

ஸ்டாலினை தவிர்த்து மொத்தம் 33 அமைச்சர்கள். திமுகவிற்கு வெற்றியை வசப்படுத்தி கொடுத்த டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வெற்றி பெற்ற ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.

திமுகவிற்கு வெற்றியை கொடுத்த டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில், ஸ்டாலின் வேறு திட்டம் வைத்திருந்திருக்கிறார். அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்படாத ஏரியாக்கள் மற்றும் சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு சபாநாயகர், துணை சபாநாயகர், கொறடா ஆகிய பதவிகளை கொடுக்கும் திட்டத்தில் இருந்தார் ஸ்டாலின்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவி.செழியன் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.