திருமலை:

லகப் பணக்கார சாமியான திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த ஆண்டு மட்டும் உண்டியல் மூலம் கிடைத்த வருமானம்   ரூ.1,161 கோடி  என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

‘திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிகழும்’ என்பது பொதுமக்களின் நம்பிக்கை. திருமலையில் குடி கொண்டிருக் கும் வெங்கடேச பெருமாள், சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், விருஷபாத்திரி, அஞ்சனாத்ரி, ஆனந்த கிரி, வேங்கடாசலம் என்பவையே ஏழு மலைகள். ஆகிய ஏழுமலைகளுக்கும் சொந்தமானவர் என்பதால், அவரை  ‘ஏழுமலையான்’ என அழைக்கிறோம்.

ஏழுமலையான்  இவர் உலகின் பணக்காரக் கடவுள் என அழைக்கப்படுகிறார். பக்தர்கள் தங்களது வேண்டுகோள் நிறைவேறியதும், அவர்களால் இயன்ற அளவுக்கு ஏழுமலையானுக்கு அள்ளியும், கிள்ளியும் கொடுக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏழுமலையானுக்கு கிடைத்த நன்கொடைகள், உண்டியல் வருமானம், செலவுகள் குறித்து திருமலை தேவஸ்தானம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 2 கோடியே 79 லட்சம் பக்தர்கள் ஏழுமலையான  சாமி தரிசனம் செய்துள்ளனர்.

திருப்பதி கோவிலில் கடந்த  ஆண்டு (2019) உண்டியல் வருமானம் ரூ.ஆயிரத்து 161 கோடியே 74 லட்சம் வந்துள்ளது.

12 கோடியே 49 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ற்கனவே  கடந்த 2018-ம் ஆண்டு 2 கோடியே 68 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ரூ.1066 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் ரூ.95 கோடி உண்டியல் வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது.

மேலும்,  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. அவற்றை பக்தர்கள் முன்பதிவு செய்துகொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் உள்ள டிக்கெட்டுகள் விவரம் வருமாறு:-

சுப்ரபாதம் 7,920, தோமாலை 140, அர்ச்சனை 140, அஷ்டதள பாதபத்மாராதனை 180, நிஜபாதம் 2,300.

கல்யாண உற்சவம் 12,825, ஆர்ஜித பிரம்மோற்சவம் 7,425, வசந்தோற்சவம் 13,200, ஊஞ்சல் சேவை 4,050, சகஸ்ர தீபலங்கார சேவை 15,600, விசே‌ஷ பூஜை 1,500 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.