நிறக்குருடு உள்ளவரா..? அப்ப உங்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம்…! ஓகே சொன்ன மத்திய அரசு

டெல்லி: நிறக்குருடு உள்ளவர்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிறக்குருடு என்ற பாதிப்பை உடையவர்களுக்கு நிறங்கள் தெரியாது. ஆகவே இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற முடியாத நிலை இருந்தது.

இதுதொடர்பாக மத்திய அரசானது, மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனைகளை பெற்றது. நிறக்குருடு உள்ளவர்களால் நிறங்களை மட்டும் அடையாளம் காண முடியாதே. ஆனால், மற்ற அனைத்து செயல்பாடுகளை சரிவர செய்ய முடியும் என்று ஆலோசனை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஆன்லைன் வழியாக கருத்துகளை கேட்டது. பொதுமக்களின் பெரும்பாலான கருத்துக்களின் அடிப்படையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.