அனைத்து இந்தியரும் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம் : அரசு அறிவிப்பு

டில்லி

ன்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் இனி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அனைத்து இந்தியரும் நிலம் வாங்கலாம் என அறிவிக்கபடுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு 370 சட்டப்பிரிவை விலக்கிக் கொண்டது.  அதன்படி காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.  மேலும் அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

 இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு சடத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் அனைத்து இந்தியரும் நிலம் வாங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.  இந்த ஆணை ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மூன்றாம் ஆணை 2020 எனப் பெயரிடப்பட்டுள்ளது

இந்த ஆணைக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா டிவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  அவர் தற்போது காஷ்மீர் மாநிலமே விற்பனைக்கு வந்துள்ளதாகவும், சிறு நில ஏழை உரிமையாளர்கள் இதனால் துயரம் அடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.