விடுமுறை தினமான ஏப்ரல் 3 அன்று  ரேஷன் கடைகள் செயல்படும் : அரசு அறிவிப்பு

சென்னை

ரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி அன்று விடுமுறை தினம் என்றாலும் ரேஷன் கடைகள்  செயல்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு வார விடுமுறை வெள்ளிக்கிழமை ஆகும்.

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் இலவசப் பொருட்கள் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த பொருட்கள் வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன.

இந்த பொருட்களை வழங்குவதற்காக வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு இதற்கு பதில் விடுப்பு வழங்கப்படும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.